திருவனந்தபுரம்: தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.02 லட்சமாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில், 19 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில், கொரோனா வைரஸ் தொற்றால் 137 பேர் பாதிக்கப்பட்டனர். அதில், 11 பேர் குணமடைந்துள்ளனர். இப்போது சிகிச்சையில், 126 பேர் உள்ளனர். ஒரு லட்சத்து இரண்டாயிரத்து மூன்று பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். அதில், 601 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.